Friday, May 11, 2007

ரிலேட்டிவிட்டி

ஒருத்தர் ரொம்ப வருசம் நகரத்துல் வேல பாத்துட்டு, கிராமத்துல புது வீடுகட்டி குடி போனாரு. அவர பாக்க வந்த பளைய நண்பர் கேட்டாரு, எவ்வளவு செலவாச்சு, நகரத்துவாசி செண்னாரு பத்தாச்சு.

சும்மா செல்லாதிங்க, பத்தாயிரத்துல எல்லாம் வீடுகட்ட முடியுமா? என்ன ஒரு ரெண்டரை முனு ஆகிருக்குமா?...

நகரத்துவாசி பத்துனு செல்ல வந்தது பத்து லச்சத்த.... நண்பர் சொண்ன தொகய கேட்டு சிருச்சுக்கிட்டே விட்டுட்டாரு...

நண்பர் நினைச்சாரு, என்ன ஏமாத்த முடியுமா?

இதப்பத்தி நிறைய வேண்டிருக்கு, ஆனா இப்ப நேரமில்ல...

Wednesday, May 2, 2007

ரொம்ப வெவரம்

பிரின்ட் குடுத்துட்டு, பிரின்ட் கியுல போய், பிரயாரிட்டி ஹை செட்பன்னிட்டு, பிரின்டர் கிட்ட போய் பாத்தா, ஒருத்தன் பிரின்டர கலட்டிபோட்டு வேல செஞ்சுட்டிருக்கான்!

Friday, April 27, 2007

நாங்களும் வேலை பாக்கிறோம்ல...

அன்பு நண்பர்களே.....

எப்படி இருக்கீங்க?.. நான் இங்கு மிக்க நலம்....

உங்களுக்கு ஒரு விசயம் சொல்லிக்கிறேனுங்கோ... நான் இப்ப வேலை பார்க்கிற team ல.. ஏறக்குறைய 40 சதவீதம் பெண்கள், அதுல 80 சதவீதம் சின்ன பெண்கள் என்றே சொல்லலாம்.... இதனால இங்க இருக்குற சின்ன பசங்க நிலமையை பற்றி உங்களுக்கு சொல்லித்தான் தெரியனும்னு இல்லை....

சரி இந்த பெண்கள்தான் வேலை பாக்கிறாங்களா?... அதுவும் கிடையாது... எப்ப பாத்தாலும் ஒரே சத்தம்.... :-) (அப்படி சத்தம் வரும்போத்ல்லாம் எனக்கு நம்ம அப்பாசு இங்க இருந்தா எப்படி இருக்கும்னு யோசிச்சூபாத்துப்பேன்... :-) )

சொல்ல வந்த விசயத்தயே மறந்துட்டேனே!!!..

எப்பவும் வெரும் ச்த்தம் மட்டும் வரும்... ஆனா இன்னக்கி ... எல்லா பெண்களும் சேலையில் வந்துஎல்லார்க்கும் இனிப்பு குடுத்தாங்க, என்ன காரணம்னு கேட்டா.. சும்மான்றாங்க....
அதோட விட்டாங்களா? .. இப்போ cameraவ கைல எடுத்துக்கிட்டு... படம் புடிக்கனும்.,,, கிளம்புன்றாங்க....

சுத்தம்.... நல்லா பாக்கிறாங்கப்பா... வேலை...

சுரேஷ்

Tuesday, April 24, 2007

சும்மா இருக்கீங்களா?

வெட்டி வேலை எதுவும் இல்லை। சரி அப்படியே இருந்தாலும் வெட்டி வேலை செய்யரது நம்ம பரம்பரைகே இழுக்கல்லவா? அதனால் செய்யமாட்டொம்। ரெம்ப சரி, ஏதாச்சும் உருப்படியான வேலை இருக்கா? அதுவும் இல்லை। (அதான் பதியறோம்ல...)। அப்புறம்...? சும்மா இருக்கீங்களா? என்னது ஆமாவா? வாங்க...வாங்க உங்களைத்தான் தேடிட்டு இருந்தேன், கீழே எழுதியிருக்கரத படிங்களேன்...

இழப்பதற்கு ஒன்றுமில்லை அடைவதற்கே பொன்னுலகம் அப்டின்னு காரல் மார்க்சு சொல்லியி்ருக்காரு அதனால கொஞ்சம் தங்கம் வெட்(டி)ட முயர்ச்சி செய்யலாமே...!

வெட்டி வேலை தொடரும்....

Sunday, April 22, 2007

முதல் வணக்கம்...!!!

வணக்கம் அன்பர்களே...!!!

கொங்கு நாட்டிலிருந்து இன்னுமிரு நண்பர்கள் வலையுலகில் சுவடு பதிக்க முயர்ச்சிக்கிறோம். புதியவர்களை வரவேற்க்கும் வலையுலக நண்பர்களே எங்களையும் வாழ்த்தி, வழிநடத்திட வேண்டுகிறோம்.


இவண்,
அ-வும் அ-வும்.
(அருணும் அப்பாஸும்)


Anonymous said...

என்னமோ செய்ரீங்கடா...

முதல் அனானியாக நானே பரிசோதனை பின்னூட்டமிடுகிறேன்....
யாரும் தவறாக நினைக்கவேண்டாம்.

FireFox-ல் தமிழ் தட்டச்சு செய்யலாம் வாங்க....


தமிழில் தட்டச்சு செய்ய ALT+F8 ஆங்கிலத்திற்கு F9


தீ நரி தமிழ்ச்சாவி செயலியிருத்தல் அவசியம்.